தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

நெதர்லாந்தில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் ஆண்டு நினைவு நாள்(இரண்டாம் இணைப்பு!)






நெதர்லாந்தில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் ஆண்டு நினைவு நாள்

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது.
சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே வைகாசி 18ம் திகதி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.
அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் குறைந்த அளவில் தமிழீழ உறவுகள் வாழ்கின்ற பொழுதும் மே 18ம் திகதி அன்று 2.30 மணிக்கு நெதர்லாந்தில் டென் காக் பாராளுமன்றம் முன்பாக தமிழினவழிப்பின் 4ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சிப்பூர்வமாக தமிழினவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட உறவுகளுக்காகவும் மாவீரர்களுக்காகவும் உணர்வுப்பூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தினர்.
அம்ரர்டாம் நகரிலிருந்து டென் காக் பாராளுமன்றம் வரை நடையணத்தை நிகழ்த்திய சூரி மற்றும் விமல் ஆகிய இருவரும் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க ஈகச்சுடரினை நெதர்ராந்து தமிழர் பேரவை பொறுப்பாளர் ரூபன் அவர்கள் ஏற்றி வைத்த பின்னர் மலர் வணக்கநிகழ்வு இடம் பெற்றது.
மலர் வணக்கத்தை தொர்ந்து கவிதைகளும் உரைகளும் இடம்பெற்றன. இறுதியில் எழுச்சிப்பூர்வமாக தமிழினவிப்பின் 4ம் ஆண்டு நினைவு நாள் நிறைவடைந்தது.

Geen opmerkingen:

Een reactie posten